Monday, August 8, 2016

தனுஷின் ‘கொடி’ தீபாவளியில் பறக்கிறது


தனுஷ், திரிஷா, அனுபமா பரமேஸ்வரன் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘கொடி’. துரை.செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார்.
முதன்முறையாக தனுஷ்-திரிஷா இணைந்து நடித்திருக்கும் ‘கொடி’ அரசியல் கலந்த திரில்லர் கதையாக உருவாகியுள்ளது. தனுஷ் இரட்டை வேடங்களில் நடித்திருக்கும் இப்படம் அக்டோபர் 29-ம் தேதி தீபாவளியன்று வெளியாகிறது.
தீபாவளிக்கு ஏற்கெனவே கமலின் ‘விஸ்வரூபம்-2’, கார்த்தியின் ‘காஷ்மோரா’ மற்றும் விக்ரம் பிரபுவின் ‘வீர சிவாஜி’ ஆகிய படங்கள் வெளியாகவுள்ளது. இந்த படங்களுடன் தற்போது தனுஷ் படமும் போட்டியிட களமிறங்குகிறது.
தனுஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘தொடரி’ ஆகஸ்ட் 12-ம் வெளியாகிறது. ‘தொடரி’, ‘கொடி’ படங்களைத் தொடர்ந்து ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ திரைப்படமும் இந்த வருடமே வெளியாகலாம் என்று கூறப்படுகிறது.
நீண்ட இடைவேளைக்குப் பின் தனுஷ் படங்கள் அடுத்தடுத்து வெளியாவது அவரது ரசிகர்களை உற்சாகமடைய செய்துள்ளது.